Friday, August 29, 2008

குசேலன் ஒரு பார்வை

        என்னடா கோவாலை கொஞ்ச நாளா காணோமேனு நினைக்கும் போது ஆயுசு 100 க்கு குறையாம அண்ணாச்சின்னு வந்து ஆஜரானான் .
        வந்தும் வராததுமாய் குசேலன் படம் ஓடலயாமே ரெம்ப நஸ்டமாச்சமே யாரெல்லாம் தெருவுக்கு வந்துடாங்கனு கேட்டான்....


        டேய் படம் டைரக்ட் பண்ணின இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி சம்பளம் கிடைச்சிருக்கு அதனால அவருக்கு நஷ்டம் இல்ல. நடிச்ச ரஜினிக்கு 20 கோடி அதனால அவரும் நஷ்ட பட்டிருக்க மாட்டாரு.
        அப்போ படம் எடுத்த பாலசந்தர் நஷ்டப்பட்டாரா? ணு கேட்டான்.. அவரு ஏன்டா கஷ்டப்படுரறு 61 கோடிக்கு பிரமீட் சாய்மீராக்கு வித்துட்டாரே..!!!..
சாய் மீராவும் 600 பிரிண்ட் போட்டு தியேட்டர் காரங்ககிட்ட வித்துட்டு..

        அப்போ யாருக்குதான் நஷ்டம்? எல்லாம் நல்லாதானே நடந்திருக்கு..ணு கேட்டான்..
        அப்படி கேளு ... இது நஷ்டக்கணக்கு இல்ல.. இப்போ நடக்கிறது லாபத்தை பங்கு பிரிக்கிற சண்டை கணக்கு....தியேட்டர்காரங்க ரஜினி படம்பிளாக்கில் 500,1000 ணு வித்தா கோடி கோடியாய் அள்ளலாம்நூ பேராசை பட்டு பிரமீட் சாய்மீரா சொன்ன விலைக்கு வாங்கி அநியாய விலைக்கு டிக்கெட் விற்க நினைச்சா. நம்ம பய ஒருத்தனும் வங்கி பாக்க மாட்டேனுட்டான். இப்போ ஒரிஜினல் திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் கூட வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால்.
இப்போ பட லாபத்தை பங்கு போட தியேட்டர் காரங்க கணக்கு கேக்குறாங்க....
கிடைச்ச லாபத்தை பங்கு போட ஒருதருன் தயாரா இல்ல .. அது தான் இந்த குடிமிபுடி சண்டை....
        அப்போ இந்த லாப நஷ்ட கணக்கெல்லாம் யாரு பாக்கா ?

        அடேய் யாரும் ஆடிட்டர் வச்சி அக்கௌன்ட்ஸ் காட்டலை ....இதெல்லாம் காத்து வாக்குல வர செய்தி ..உண்மை நிலவரம் உள்ளவங்களுக்கு தெரியும்.... நமெக்கெல்லாம் கருப்பு பண கணக்கு காட்டமாட்டாங்க.... நீயும் நானும் நம்ம ஊர் டூரிங்டாக்கீஸ்ல 5 ரூபாய்க்கு மேல 5 காசு கொடுத்து பாக்க மாட்டோம் இதெல்லாம் நமக்கு எதுக்கு?.. போய பொழப்பை பாரு..

        கோடிகளுக்காக நடக்கும் கேடிச்சண்டைய நாமளும் தெருக்கோடியில நின்னு பாக்கலாம்.....ணு கோவாலு முனகிட்டே நடக்க ஆரம்பிச்சான் .

6 comments:

ISR Selvakumar said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீஙக!
இது கோடிகளை பங்கு போடும் சண்டைதான்.
இவர்களில் யார் யார் தெருவுக்கு வரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

ஆனால் இவர்களுடைய சண்டை முதலில் தெருவுக்கு வந்து விட்டது.

Anonymous said...

பேராசை பெருநஷ்டம். எல்லாம் தியேட்டர்காரங்களை
பத்திதான் சொல்றேன்.நல்லா வேணும் அவங்களுக்கு! அடுத்த ரஜினி படத்துக்கு என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்.

Anonymous said...

வலைத்தளத்தின் தலைப்பே சிறப்பா இருக்கு :) நீங்க நெல்லையா ?

george said...

ஆமாங்க சேவியர் ...வருகைக்கு நன்றி ...

Unknown said...

ada tamila yeludhungapa.... tirunelveliya thaandiyum tamilnaadu irukku.

Guruprasath said...

எந்த பத்திரிகைய பிரிச்சாலும் குசேலன்,டி.வி.லயும் குசேலன்..,உங்க வலைப்பூலயும் குசேலந்தானா. புளிச்சுப் போச்சு, அண்ணாச்சி. ஆனா,பிளாக் பேரும், உங்க நடையும் சூப்பர்...