Wednesday, September 24, 2008

குடும்ப அரசியலும் ..கார்ப்பரேட் கம்பனியும் ...ஒரு பார்வை ..

              அண்ணாச்சி..கட்சினாலே ஒரு குடும்பம் மாதிரிதானே அதுல என்ன குடும்ப அரசியல்ன்னு கேட்டுகிட்டே உள்ளே வந்தான் கோவாலு ....

ஆகா.. ஆரம்பிச்சிட்டானே.. இன்னைக்கு எப்போ போகப் போறானோ...னு முனகிட்டே எம்பொஞ்சாதி சில்லாட்டை பறக்க காட்டுக்கு கிளம்பிட்டா...

நானும்... குடும்பம் என்னடா குடும்பம் ... இன்னைக்கு தமிழ்நாட்டு கட்சிகள் எல்லாமே கார்ப்பரேட் கம்பனி மாதிரில எவ்வளவு காசு பாக்கலாமுன்னு லாப நோக்குல நடக்கு னேன்.

அதென்ன கார்ப்பரேட்னு ..ஆழம் பாக்க ஆரம்பிச்சான்..

டேய்....பெரிய கம்பனில உயர்ந்த பதவில இருக்கிறவங்க எல்லாம் ஒவ்வொரு மாதிரி முன்னுக்கு வந்து கம்பனிய நடத்துவாங்க ... ...

சிலர் மாமன் மச்சான் எல்லோரையும் கூட்டு சேத்து கம்பனி ஆரம்பிப்பாங்க ...கம்பனி வளந்திசினா சொந்த காரங்க எல்லாம் முக்கிய பொறுப்புள்ள இடத்துல வைப்பாங்க...நம்ம கேப்டன் மாதிரி ...

சிலர் கூட்டு முயற்சில கம்பனி ஆரம்பிச்சு ..கம்பனி நல்ல நிலைக்கு வந்த உடனே ....கம்பனியின் ஆரம்பகால உயர்வுக்கு பாடுபட்ட நல்லவர்களைஎல்லாம் கழட்டிவிட்டுட்டு ..தன் ரெத்த சொந்தங்களையெல்லாம் பின் வாசல் வழியே உள்ள கொண்டுவருவாங்க ...நம்ம ஐயா போல ...

இன்னும் சிலர் நல்ல கம்பனில கீழ்மட்டத்துல வேலைல இருப்பாங்க.. கம்பனில நிர்வாக குழப்பம் ஏற்படும் போது தங்க சாதூர்யத்தால் சினியாரிட்டிஎல்லாம் தாண்டி போஸ்ட புடிச்சிட்டு அந்த கம்பனியையே கண்ட்ரோல்ல கொண்டுவந்துடுவாங்க ....அப்பரம் எல்லாம் அவங்க வச்சது தான் சட்டம்..அம்மா மாதிரி....

ஒரு சிலர் கம்பனில உயர்ந்த இடத்துக்கு வந்துட்டு அதை வேற யாருக்கும் விட்டு கொடுக்காம தன் வாரிசையே தனக்கு பிறகும் உயர்ந்த இடத்தில் வைக்க ....சரியான, திறமையான வாரிசை கண்டுபிடிக்க தெரியாம ஒவ்வொருத்தரையா பதவி கொடுத்து பக்குவ படுத்தி பாப்பாங்க ...கடைசில வாரிசு சண்டைல நொந்து நூடூல்ஸ் ஆவாங்க ..நம்ம கலைஞர் மாதிரி.....


ஆக மொத்ததுல பதவி சுகத்துக்காக ..சுத்தி உள்ளவங்களை நம்பாம ..தங்க சொந்த பந்தங்களையே ..நெருக்கத்துல வச்சி லாபம் ஒன்னையே குறிக்கோள்னு இருக்காங்க.....
கடைசிதொண்டனுக்கு வேணும்னா குடும்ப அரசியல் நச்டமாகலம் ..ஆனால் பெருந்தலைகளுக்கு எப்போதுமே வசதிதான்..னு விளக்கம் கொடுத்தேன் ..

என்ன அண்ணாச்சி சொல்றீங்க ...வைகோ லாம் அப்படி இல்லையே ....

ஆமாடா ...அதனால்தான் செஞ்சியும், எல்ஜியும் கழண்டு ஓடினாங்க ... அந்த இடத்துல அவர் மச்சானோ ..மவனோ இருந்தா இப்படி நடந்துருக்குமா.....அவரே இப்போ பீல் பண்ணிருப்பார்னேன் ..

அப்போ என்னதான் சொல்றீங்க ...தமிழ்நாட்டுல குடும்ப அரசியல் எப்போ தான் ஒழியும்...ஒழிந்சிட்டானு எப்படி தெரிஞ்சுக்கிறதுனு கேட்டான் ..

அப்படி கேளு .... என் காலத்துக்கப்புரம் ..நீ இப்படியே கேள்வி கேட்டுட்டு இருந்து ..எம் பொஞ்சதியோ / புள்ளையோ பதில் விளக்கம் சொன்னா ..குடும்ப அரசியல் தொடருது..
இல்ல நீ விளக்கம் சொல்ற இடத்துக்கு வந்துட்டா குடும்ப அரசியல் முடிஞ்சிதுன்னு தெரிஞ்சுக்கலாம் ....னு சொன்னா ...

உங்க குடும்ப அரசியலுக்கு தமிழ்நாட்டு அரசியலே மேல்னு நடக்க ஆரம்பித்தான் ......

Tuesday, September 16, 2008

ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சு வந்தாலும்...

               அண்ணாச்சி நம்ம தலைவரு ஒத்தை ரூவாக்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கிறாரே அதைபத்தி என்ன நினைகேறீங்கனு என்னவோ தலைவர் அவங்க அப்பா வீட்டு அரிசியை ப்ரியா கொடுத்த மாதிரி என்கிட்ட வந்து கேட்டான்.
              நல்ல விசயந்தான் ..ஆனா வரவு எட்டன்னா செலவு பத்தன்னா மாதிரி இஷ்டத்துக்கு கஜாணாவ காலி பண்றார். கேக்கிறதுக்கு தான் ஒருத்தனுக்கும் தெம்பு இல்ல ணு சொன்னேன்..
              அவன் என்ன அண்ணாச்சி எதிர் கட்சி மாதிரி எப்போவுமே குத்தம் சொல்றீங்க..ஒலகத்துல ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறது நம்ம ஊர்லதான் நீங்க என்னனானு இழுத்தான்..
              டேயி நான் ஒன்னும் எதிரி கட்சி இல்ல... அரிசி ஒன்னும் தமிழ்நாட்டுல ஒரு ரூபாய்க்கு கிடைக்கல .... கொஞ்சம் பேருக்கு கொடுக்கிறாரு ...கிடைக்கிரதுக்கும் கொடுக்கிறதுக்கும் நெறைய வித்தியாசம் ...அதுக்கு பதிலா ஒருநாள் கூலில ஒரு ரூபா கூட்டினா நீ ரெண்டு ரூபா கொடுத்து வாங்கி பிரியாணி கூட செஞ்சி சாப்டலாம் .... நம்மால் பொருளாதரத்துல மேல கொண்டுபோக சொன்னா.. இலவசமா கொடுத்து கொடுத்தே குட்டிசுவரக்கி கற்காலத்துல போய் விடுவார் போல இந்த பொற்கால மன்னர் ...
              அதுக்கு போங்கனாட்சி நீங்க கரெண்ட் கட் பண்ற காண்டுல பேசுறீங்க .. அம்மா ஆட்சிலேயுந்தன் கரெண்ட் கட் இருந்திச்சி ....இப்போ விலைவாசி எல்லாம் யேரிச்சி, தலைவர் என்ன பண்ணுவார் பாவம்ணு வருத்தப்படுறான் ....
              எல்லாந்தான் அம்மா ஆட்சிலேயும் இருந்திச்சி... இருந்திச்சி ணு சொன்னா ..அப்போ நீங்க எதுக்கு ..அம்மாவே இருந்துருக்கலாம்ல.. வீனா எலேக்சன் எதுக்கு..?..
" எங்கள் ஓட்டுனர் திறமையனவர்னு " பஸ்ல எழுதிருக்கிற மாதிரிதானே ...ஐயா நல்லவரு வல்லவரு அனுபவமிக்கவரு ...குண்டும் குழியுமான ரோடுலேயும் ஆடாம அலுங்காம கொண்டுபோவார்னு தானே தமிழ்நாடுங்க்ற வண்டியகொடுத்தா ..அது சொத்தை இது சொள்ளைணு சொல்லிட்டு வண்டிய பள்ளத்துல விட்டா நாங்க பாத்துட்டு நிக்கனுமானு கேட்டேன்....
               நீங்க எப்பவுமே இப்படித்தான் ..இலவசமா கொடுத்தாலே உங்களிக்கு பிடிக்காதே..உங்ககிட்ட பேசி வீணடிக்கிற நேரத்துல உருப்படியா இலவச தொலைக்காட்சில அடுத்து தலைவர் என்ன இலவசமா கொடுக்க போறார்னு பாக்கபோறேனு கிளம்பிட்டான்..
               அடுத்த எலக்சன்ல தமிழ்நாட்டு மக்களை இலவசத்துல இருந்து ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சுவந்தாலும் காப்பாத்த முடியாது போல....