Friday, August 29, 2008

குசேலன் ஒரு பார்வை

        என்னடா கோவாலை கொஞ்ச நாளா காணோமேனு நினைக்கும் போது ஆயுசு 100 க்கு குறையாம அண்ணாச்சின்னு வந்து ஆஜரானான் .
        வந்தும் வராததுமாய் குசேலன் படம் ஓடலயாமே ரெம்ப நஸ்டமாச்சமே யாரெல்லாம் தெருவுக்கு வந்துடாங்கனு கேட்டான்....


        டேய் படம் டைரக்ட் பண்ணின இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி சம்பளம் கிடைச்சிருக்கு அதனால அவருக்கு நஷ்டம் இல்ல. நடிச்ச ரஜினிக்கு 20 கோடி அதனால அவரும் நஷ்ட பட்டிருக்க மாட்டாரு.
        அப்போ படம் எடுத்த பாலசந்தர் நஷ்டப்பட்டாரா? ணு கேட்டான்.. அவரு ஏன்டா கஷ்டப்படுரறு 61 கோடிக்கு பிரமீட் சாய்மீராக்கு வித்துட்டாரே..!!!..
சாய் மீராவும் 600 பிரிண்ட் போட்டு தியேட்டர் காரங்ககிட்ட வித்துட்டு..

        அப்போ யாருக்குதான் நஷ்டம்? எல்லாம் நல்லாதானே நடந்திருக்கு..ணு கேட்டான்..
        அப்படி கேளு ... இது நஷ்டக்கணக்கு இல்ல.. இப்போ நடக்கிறது லாபத்தை பங்கு பிரிக்கிற சண்டை கணக்கு....தியேட்டர்காரங்க ரஜினி படம்பிளாக்கில் 500,1000 ணு வித்தா கோடி கோடியாய் அள்ளலாம்நூ பேராசை பட்டு பிரமீட் சாய்மீரா சொன்ன விலைக்கு வாங்கி அநியாய விலைக்கு டிக்கெட் விற்க நினைச்சா. நம்ம பய ஒருத்தனும் வங்கி பாக்க மாட்டேனுட்டான். இப்போ ஒரிஜினல் திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் கூட வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால்.
இப்போ பட லாபத்தை பங்கு போட தியேட்டர் காரங்க கணக்கு கேக்குறாங்க....
கிடைச்ச லாபத்தை பங்கு போட ஒருதருன் தயாரா இல்ல .. அது தான் இந்த குடிமிபுடி சண்டை....
        அப்போ இந்த லாப நஷ்ட கணக்கெல்லாம் யாரு பாக்கா ?

        அடேய் யாரும் ஆடிட்டர் வச்சி அக்கௌன்ட்ஸ் காட்டலை ....இதெல்லாம் காத்து வாக்குல வர செய்தி ..உண்மை நிலவரம் உள்ளவங்களுக்கு தெரியும்.... நமெக்கெல்லாம் கருப்பு பண கணக்கு காட்டமாட்டாங்க.... நீயும் நானும் நம்ம ஊர் டூரிங்டாக்கீஸ்ல 5 ரூபாய்க்கு மேல 5 காசு கொடுத்து பாக்க மாட்டோம் இதெல்லாம் நமக்கு எதுக்கு?.. போய பொழப்பை பாரு..

        கோடிகளுக்காக நடக்கும் கேடிச்சண்டைய நாமளும் தெருக்கோடியில நின்னு பாக்கலாம்.....ணு கோவாலு முனகிட்டே நடக்க ஆரம்பிச்சான் .

Friday, August 15, 2008

டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...

அண்ணாச்சி...அண்ணாச்சி ணு கூப்பிட்டுகிட்டே கோவாலு உள்ளே வந்தான்.

         என்னடா என்ன விஷயமுன்னு கேட்டா , "கல்வி அறக்கட்டளை" னா என்னனு கேட்டான். நானும், பொதுமக்கள் நாலு பேர் நல்லவிதமா படிக்க காசு உதவி பண்றதுக்கும், இலவசமா / மானியமா கல்வி கற்று கொடுக்கவும், மற்றும் பல கல்வி பயன்பாட்டுக்கும் உதவுற வகையில தனியாரோ /அரசோ நிர்வகிக்கிற அமைப்புனு சொன்னேன். அதுக்கு வரி விலக்கெல்லாம் உண்டானு கேட்டான்? நானும் ஆமானு சொன்னேன்.
         டி.எம். சவுந்திரராஜன் யாருன்னு தெரியுமான்னு கேட்டான். அவர் பழம்பெரும் பின்னணி பாடகர். நம்ம புரட்சி தலைவருக்கெல்லாம் நிறைய பாட்டு பாடிருக்கார்னு சொன்னேன். அவருக்கும் கல்விக்கும் என்னடா சம்பந்தம்... ஏன்டா மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுறேன்னு கேட்டா.... அதுக்கு அவன் கேக்கான் .....

         நம்ம முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்காங்களே.... டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...

Monday, August 11, 2008

அன்புள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவருக்கு...

        எதித்த வீட்டு கோவாலு எங்கிட்ட என்னடா உங்க தலைவரு "சமத்துவ மக்கள் கட்சி" னு ஆரம்பிச்சுட்டார் ஏற்கனவே இருந்த திமுக , எட்டிபாத்த ஆதிமுக எல்லாம் என்ன ஆச்சுன்னு கேட்டான்.
        அப்போதான் இந்த மரமண்டை யோசிக்க ஆரம்பிச்சுது. ஒருவேளை நாடார் கட்சினா வேற சாதிசனம் ஓட்டு போடதுனு தலை நினைச்சுதானு.......
        அப்போ கோவாலு திரும்பவும் உள்ள புகுந்து "ஏன்டா வேற சதிசனத்தை சொல்ற நம்ம நாடக்கமாரே ஒட்டு போட மாட்டாங்களே...ஏற்கனவே திருநெல்வேலில ஆப்பு வைச்சங்கள"
அதுக்குள்ளே மறந்திட்டியானு கேட்டான் .
        அதுக்கு நா தலைவரு எவ்வளவோ பண்ணிருக்கார் ... மெர்கண்டைல் பேங்க் பேரணி வந்தார்னு சொன்னேன். உடனே "நானும்தான் வந்தேன் அவர் அப்பரம் என்ன பண்ணினாரு "ணு குறுக்க அருவாளை போட்டான். அவன்சொல்றதும் நெசந்தானே....
        நானும் விடாம சரி அதை விடு பெருந்தலைவருக்கு மணிமண்டபம் கட்டுராரேனு சொன்ன்னேன். அவன் அதுக்கு மண்டபம் அடிகல்லோட நிக்கி... காவேரி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வரும் மண்டபம் முடியாதுன்னு சொல்லறான். ஏன்னு கேட்டா முந்தி தலைவர்கிட்ட நாடார் முத்திரை இருந்தது , இப்போ தான் சமத்துவ தலைவராகிட்டாரே... பெருந்தலைவருக்கு கட்டினா வரிசையா அண்ணலுக்கும், பசும்பொன்னுக்கும் கட்டணுமே னு யோசிப்பாரேனு.... இப்போஎல்லாம் கோவாலும் புத்திசாலி ஆகிட்டான்.

        என்னடா எது சொன்னாலும் விட மாட்டேன்குரானேனு நானும் யோசிச்சு " இது நாள் வரைக்கும் தலைவரு நாடார் சமுதாயத்துக்கு தானே மொங்கான் போட்டாரு .. நாட்டுல இன்னும் நெறைய சமுதாயம் இருக்குல அதையும் விடக்கொடதுனு நினைசிருப்பர்போலனு" சொல்லி திரும்பி பாத்தா ஆளையே காணோம் சிட்லு மாதிரி பரந்திட்டான்...

        பனையேரியா கொக்கா..... என்ன தலைவரே நான் சொல்றது சரிதானே ?....