Friday, August 15, 2008

டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...

அண்ணாச்சி...அண்ணாச்சி ணு கூப்பிட்டுகிட்டே கோவாலு உள்ளே வந்தான்.

         என்னடா என்ன விஷயமுன்னு கேட்டா , "கல்வி அறக்கட்டளை" னா என்னனு கேட்டான். நானும், பொதுமக்கள் நாலு பேர் நல்லவிதமா படிக்க காசு உதவி பண்றதுக்கும், இலவசமா / மானியமா கல்வி கற்று கொடுக்கவும், மற்றும் பல கல்வி பயன்பாட்டுக்கும் உதவுற வகையில தனியாரோ /அரசோ நிர்வகிக்கிற அமைப்புனு சொன்னேன். அதுக்கு வரி விலக்கெல்லாம் உண்டானு கேட்டான்? நானும் ஆமானு சொன்னேன்.
         டி.எம். சவுந்திரராஜன் யாருன்னு தெரியுமான்னு கேட்டான். அவர் பழம்பெரும் பின்னணி பாடகர். நம்ம புரட்சி தலைவருக்கெல்லாம் நிறைய பாட்டு பாடிருக்கார்னு சொன்னேன். அவருக்கும் கல்விக்கும் என்னடா சம்பந்தம்... ஏன்டா மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுறேன்னு கேட்டா.... அதுக்கு அவன் கேக்கான் .....

         நம்ம முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்காங்களே.... டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...

2 comments:

Unknown said...

//நம்ம முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்காங்களே.... டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...\\

:-))))))))))

இது கல்வி ஊக்குவிப்புத்தொகை அல்ல. ஓட்டு சேகரிப்புத்தொகை.
கட்டுக்கோப்பான கிராமத்தின் மொத்த ஓட்டுக்களையும் வாங்க நாட்டாமைக்கு கொடுப்பது போல.

பொறவு, அந்தப்பக்கம் கணிசமா இருக்கிற சவுராஷ்ட்ர சனங்களோட ஓட்டை யாரூ வாங்கி தருவாங்களாம்.

Anonymous said...

keep posting....cute