Tuesday, September 16, 2008

ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சு வந்தாலும்...

               அண்ணாச்சி நம்ம தலைவரு ஒத்தை ரூவாக்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கிறாரே அதைபத்தி என்ன நினைகேறீங்கனு என்னவோ தலைவர் அவங்க அப்பா வீட்டு அரிசியை ப்ரியா கொடுத்த மாதிரி என்கிட்ட வந்து கேட்டான்.
              நல்ல விசயந்தான் ..ஆனா வரவு எட்டன்னா செலவு பத்தன்னா மாதிரி இஷ்டத்துக்கு கஜாணாவ காலி பண்றார். கேக்கிறதுக்கு தான் ஒருத்தனுக்கும் தெம்பு இல்ல ணு சொன்னேன்..
              அவன் என்ன அண்ணாச்சி எதிர் கட்சி மாதிரி எப்போவுமே குத்தம் சொல்றீங்க..ஒலகத்துல ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறது நம்ம ஊர்லதான் நீங்க என்னனானு இழுத்தான்..
              டேயி நான் ஒன்னும் எதிரி கட்சி இல்ல... அரிசி ஒன்னும் தமிழ்நாட்டுல ஒரு ரூபாய்க்கு கிடைக்கல .... கொஞ்சம் பேருக்கு கொடுக்கிறாரு ...கிடைக்கிரதுக்கும் கொடுக்கிறதுக்கும் நெறைய வித்தியாசம் ...அதுக்கு பதிலா ஒருநாள் கூலில ஒரு ரூபா கூட்டினா நீ ரெண்டு ரூபா கொடுத்து வாங்கி பிரியாணி கூட செஞ்சி சாப்டலாம் .... நம்மால் பொருளாதரத்துல மேல கொண்டுபோக சொன்னா.. இலவசமா கொடுத்து கொடுத்தே குட்டிசுவரக்கி கற்காலத்துல போய் விடுவார் போல இந்த பொற்கால மன்னர் ...
              அதுக்கு போங்கனாட்சி நீங்க கரெண்ட் கட் பண்ற காண்டுல பேசுறீங்க .. அம்மா ஆட்சிலேயுந்தன் கரெண்ட் கட் இருந்திச்சி ....இப்போ விலைவாசி எல்லாம் யேரிச்சி, தலைவர் என்ன பண்ணுவார் பாவம்ணு வருத்தப்படுறான் ....
              எல்லாந்தான் அம்மா ஆட்சிலேயும் இருந்திச்சி... இருந்திச்சி ணு சொன்னா ..அப்போ நீங்க எதுக்கு ..அம்மாவே இருந்துருக்கலாம்ல.. வீனா எலேக்சன் எதுக்கு..?..
" எங்கள் ஓட்டுனர் திறமையனவர்னு " பஸ்ல எழுதிருக்கிற மாதிரிதானே ...ஐயா நல்லவரு வல்லவரு அனுபவமிக்கவரு ...குண்டும் குழியுமான ரோடுலேயும் ஆடாம அலுங்காம கொண்டுபோவார்னு தானே தமிழ்நாடுங்க்ற வண்டியகொடுத்தா ..அது சொத்தை இது சொள்ளைணு சொல்லிட்டு வண்டிய பள்ளத்துல விட்டா நாங்க பாத்துட்டு நிக்கனுமானு கேட்டேன்....
               நீங்க எப்பவுமே இப்படித்தான் ..இலவசமா கொடுத்தாலே உங்களிக்கு பிடிக்காதே..உங்ககிட்ட பேசி வீணடிக்கிற நேரத்துல உருப்படியா இலவச தொலைக்காட்சில அடுத்து தலைவர் என்ன இலவசமா கொடுக்க போறார்னு பாக்கபோறேனு கிளம்பிட்டான்..
               அடுத்த எலக்சன்ல தமிழ்நாட்டு மக்களை இலவசத்துல இருந்து ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சுவந்தாலும் காப்பாத்த முடியாது போல....

6 comments:

கணேஷ் said...

//
எல்லாந்தான் அம்மா ஆட்சிலேயும் இருந்திச்சி... இருந்திச்சி ணு சொன்னா ..அப்போ நீங்க எதுக்கு ..அம்மாவே இருந்துருக்கலாம்ல
//


நெத்தியடி அண்ணாச்சி...

ஊதுற சங்க எல்லாரும் ஊததான் செய்றாங்க... உல வேண்டியவங்க காதுலவுல மாடேங்குதே...

கணேஷ் said...

pls. remove word verification...

george said...

நன்றி கணேஷ்

Anonymous said...

Summa sollakudathu super ra sollidinga annachi,

namma tamilnaud makkala epaadi picha karana mathiri mathidangala paaa entha DMK..

Rs.1 rice kudulira goverment,

viduku 1rutharuku goveement job kudukalamnula?

Ponchandar said...

இலவசம் - ங்கற பேர்ல மக்களை பிச்சைக்காரகளாக்கி விட்டனர்.

மக்களும் சோம்பேறிகளாக மாறி உழைக்கும் எண்ணமே இல்லாமல் போய் விட்டனர்.

ஏழை மக்களுக்கு இதை எப்படி புரிய வைப்பது ?

(நானும் பனையேறிதான்)

nagai said...

welcome .....
nice to see nadars in blogs ....
please keep it up...
otherwise it spoil the our overall community.....