Wednesday, March 4, 2009
போன நாலு மாசமா தமிழ்நாட்டுல என்ன நடந்துச்சி
என்னடா கோவாலு எப்படி இருக்கானு கேட்டதும் .. என்ன அண்ணாச்சி நீங்க இல்லாத போது என்னனவோ நடந்துட்டு ..நெறைய பேச இருக்கு ..நு இழுத்தான் ..
அதுக்கு நான் அப்படி என்ன நடத்து போச்சு போன 4 மாசமா ?
திருமங்கலத்துல தி மு க தோத்துசா?
கலைஞர் அன்பழகனை முதல்வராகிட்டாரா ?
ஈழ பிரச்சினைல பா மா கா மந்திரி பதவிய ராஜினாமா பண்ணிச்சா?
தி மு க சொல்லி காங்கிரஸ் இலங்கைல போர் நிறுத்தம் பண்ணிச்சா ?
ராஜபக்சே பிரபாகரன பிடிச்சிட்டாரா ?
அம்மாதான் தனி ஈழத்தை ஆதரிசுட்டங்களா?
வைகோ தான் ஜெயிலுக்கே போகாம 100 நாள் இருந்து சாதனை பண்ணிட்டாரா ?
கேப்டன் தான் பாகிஸ்தான் போய் மும்பை தீவிரவாத கும்பலை பிடிசிட்டாரா?
இல்ல உனக்கு தான் கள் இறக்க லைசென்சு கொடுத்துட்டாங்களா?..
என்ன தான் நடந்துச்சு ?
திருமங்கலத்துல கேப்டனும் நாட்டாமையும் டிபாசிட் இழந்தது தான் மிச்சம்
கலைஞருக்கு குடும்பம் ஒற்றுமையாகி கண்கள் பனித்து இதயம் இனித்து இருக்கு .
ராமதாசு தினம் ஒரு பல்டி அடிச்சு எக்ஸ்ட்ரா சீட்டுக்கு அடி போடுறார் ..
தங்க பாலு வாய தொறந்தாலே ஒரே காமெடி அறிக்கை தான் வருது .
அம்மாவுக்கு தி மு க இல்லனா கலைஞர தாக்கி அறிக்கை கொடுக்காட்டி தூக்கமே வர மாட்டேங்குது.
வைகோ வுக்கு என்ன பண்றோம் என்ன பண்ணனும்னே தெரியல .
இலங்கைல செத்துட்டு இருக்கிற தமிழனுக்காக இங்க உள்ள தமிழனும் சாகுறான் ..
இதுல என்னடா புதுசா நடந்துருக்கு .. பேசுறதுக்கே ஒன்னும் இல்ல....
இல்ல அண்ணாச்சி ...எலச்சன் தேதி சொல்லியாச்சு ..இப்போ கூட்டணி சூடு பறக்கும் ..
படிச்சவங்க நீங்க ..கொஞ்சம் விளக்கமா கூட்டணி கணக்கு சொல்லுவீங்கன்னு பாத்தா..
படிச்சவங்க எல்லாம் படிச்ச தொழிலையா பாக்காங்க ...
தமிழ்நாட்டுல வக்கீலுக்கு படிக்கிறவனும் சரி ..படிச்சு முடிச்சவனும் தொழில மாத்திட்டாங்க போல ..
இப்போ தான தேதி அறிவிச்சுருக்கு ... அடுத்த வாரம் பாப்போம். யாரெல்லாம் கூடு விட்டு கூடு தாவுராங்கனு ... போ போய் வேலைய பாரு ...
இத சொல்றதுக்கு நீங்க வராமலே இருந்துருக்கலாம் ...
என் கண்கள் பனித்து இதயம் இனித்தாவது இருந்திருக்கும் ..நு மொனகிட்டே வெளியே நடக்கலானான் ...
Sunday, October 5, 2008
கலைஞரின் தந்தியும் தண்ணியும் ...
உங்க தலைவரு வழக்கமா கடுதாசி தான போடுவாரு ...ஏன் இந்த தடவ உன்னை தந்தி அடிக்க சொல்லி இருக்காரு ...நாட்டுல இன்லான்ட் லெட்டரு ஸ்டாக் இல்லையானு கேட்டேன் ...போங்கண்ணாச்சி உங்களுக்கு எப்பவுமே புளி ஜோக்கு சொல்லறதே வேலையாப்போச்சி..அங்க ஆர்மி க்காறான் தமிழர் மேல குண்டுபோடுறான் ..நீங்க என்னனானு...
அடேய் நாட்டை உடைச்சி தனி நாடு கேட்டா குண்டு போடாம குண்டூசியா போடுவான் ...இதெல்லாம் புளிக்கதை இல்லை புலிக்கதை... அங்க தமிழன் தனி நாடு கேட்டு போராடுறான்..இங்க அத அரசிய்ல் ஆக்கி ஆதாரம் தேடுறான் ....பாண்டியன் என்னனா திமுகாவ கூப்பிடாம தனியா மத்த கட்சிகளோட சேந்து போராட்டம்னு சொன்னார் ..கலைஞர் தனியா மாங்கொல்லைல போட்டி கூட்டம் போட்டார் ... இதுவும் உருப்படியா நடக்கல.. அதுலயும் அம்மாவும் ஐயாவும் கலந்துக்காம எஸ்கேப் ஆகிட்டாங்க ....காங்கிரசஸ் என்னனா புலி புலினே..புலி காட்டிட்டு இருக்காங்க ....
அண்ணாச்சி நீங்க ஏன் புலியையும் , தமிழர்களையும் சேத்து கொழப்புறீங்க ..னு கேட்டான் ....
ஏண்டா அப்பாவி தமிழன் தனி ஈழம் வேணும்னு கனவு காண்கிறான் ..அதுக்காக புலிகள் ஆயுதம் ஏந்தி போராடுறான் ..போராடுற புலியும் தமிழன் தானே ..அமெரிக்காகாரன் இல்லையே ...புலி வேண்டானா நீபோயா தனி ஈழம் வாங்கி கொடுக்கப்போர..தமிழ் ஈழம் என்ன ஒருரூவா அரிசியா அவ்வளவு ஈஸியா கிடைக்க ..ஆட்ட அடிச்சாதான் பிரியாணி செய்யமுடியும்னா ..அடிக்க கசாப்பு காரன் வேண்டும் ...கசாப்பு காரனும் வேண்டாம்னா ..ஆட்டை யாரு அடிக்க எப்போ பிரியாணி சாப்பிட ... அமைதி பேச்சுவார்த்தை நடத்துகி ரவனே புலி கிட்டதான் பேசுறான்.. என்னை பொறுத்தவரை ஈழத் தமிழனும் புலியும் வேறு வேறு கிடையாது .. புலியை வேண்டாம்னு சொல்றவங்க எல்லாம் தனி ஈழம் வேண்டாம்னு சொல்ராங்கனுதான் அர்த்தம் ..
புலிங்க தான் நம்ம ராஜிவ் காந்திய கொன்னவங்களாச்சே..னு இழுத்தான் ...
இன்னும் எத்தனை வருசங்களுக்கு தான் இதையே பேசுவீங்க...காந்திய கொன்ன கதையையும் மறந்துடீங்க ..ஆர் எஸ் எஸ் இருக்கு ... இந்திராவ கொன்னதுக்காக சீக்கியர்களைஎல்லாம் ஒதுக்கியா வச்சீங்க ..இப்போ பிரதமரா இல்லையா ...தமிழனுக்கு மட்டும் ஏண்டா ஓர வஞ்சனை ...சண்டைக்காரன் அமெரிக்கா கூடயே கொஞ்சி குலவும் போது நம்ம சகோதரனை ஏன் ஒதுக்கி வைக்கணும் ...னு கேட்டா ..
அப்போ நீங்க புலிக்கு சப்போர்ட் பண்ரீங்களானு கேட்டான் ..
அடேய் நான் ஒண்ணும் புலிக்கும் சப்போர்ட் பண்ணலை பூனைக்கும் சப்போர்ட் பண்ணலை..உள்ளதை சொல்றேன் ...இதெல்லாம் நாம தொடங்கி வச்ச ஆட்டம் ..பாதில கழண்டு வந்தா இப்படித்தான் .புலிக்கும் ராஜிவ்க்கும் என்ன சொத்து தகராறா ... ஏதோ ஒரு வேகத்துல நடந்து போச்சு ..நடந்த விசயத்துக்கு இப்போ புலிகளும் வருத்தப்படத்தான் செய்வாங்க .. இப்போ என்ன புலியா நம்ம நாட்டுல குண்டு வைக்கிறான் ... .நாம தான் முடிச்சு வைக்கணும் ..அதை விட்டுட்டு அரசியலாக்கி ஆதாயம் தேடக்கூடாது ....
அப்போ என்னதான் சொல்றீங்க ...இப்போ நான் தந்தி அடிக்கணுமா வேண்டாமா ?
நீ தந்தியும் அடி ..தண்ணியும் அடி நான் ஒண்ணும் சொல்லலை ....நான் என் மனசுக்கு பட்டதை சொன்னேன் னு சொன்னா...
நல்ல ஐடியா கொடுத்தீங்க ...நான் போய் முதல்ல டாஸ்மார்க்ல தண்ணி அடிக்கிறேன் அப்பரம் போய் தந்தி அடிக்கிறேன்னு கிளம்பிட்டான் ...
Wednesday, September 24, 2008
குடும்ப அரசியலும் ..கார்ப்பரேட் கம்பனியும் ...ஒரு பார்வை ..
ஆகா.. ஆரம்பிச்சிட்டானே.. இன்னைக்கு எப்போ போகப் போறானோ...னு முனகிட்டே எம்பொஞ்சாதி சில்லாட்டை பறக்க காட்டுக்கு கிளம்பிட்டா...
நானும்... குடும்பம் என்னடா குடும்பம் ... இன்னைக்கு தமிழ்நாட்டு கட்சிகள் எல்லாமே கார்ப்பரேட் கம்பனி மாதிரில எவ்வளவு காசு பாக்கலாமுன்னு லாப நோக்குல நடக்கு னேன்.
அதென்ன கார்ப்பரேட்னு ..ஆழம் பாக்க ஆரம்பிச்சான்..
டேய்....பெரிய கம்பனில உயர்ந்த பதவில இருக்கிறவங்க எல்லாம் ஒவ்வொரு மாதிரி முன்னுக்கு வந்து கம்பனிய நடத்துவாங்க ... ...
சிலர் மாமன் மச்சான் எல்லோரையும் கூட்டு சேத்து கம்பனி ஆரம்பிப்பாங்க ...கம்பனி வளந்திசினா சொந்த காரங்க எல்லாம் முக்கிய பொறுப்புள்ள இடத்துல வைப்பாங்க...நம்ம கேப்டன் மாதிரி ...
சிலர் கூட்டு முயற்சில கம்பனி ஆரம்பிச்சு ..கம்பனி நல்ல நிலைக்கு வந்த உடனே ....கம்பனியின் ஆரம்பகால உயர்வுக்கு பாடுபட்ட நல்லவர்களைஎல்லாம் கழட்டிவிட்டுட்டு ..தன் ரெத்த சொந்தங்களையெல்லாம் பின் வாசல் வழியே உள்ள கொண்டுவருவாங்க ...நம்ம ஐயா போல ...
இன்னும் சிலர் நல்ல கம்பனில கீழ்மட்டத்துல வேலைல இருப்பாங்க.. கம்பனில நிர்வாக குழப்பம் ஏற்படும் போது தங்க சாதூர்யத்தால் சினியாரிட்டிஎல்லாம் தாண்டி போஸ்ட புடிச்சிட்டு அந்த கம்பனியையே கண்ட்ரோல்ல கொண்டுவந்துடுவாங்க ....அப்பரம் எல்லாம் அவங்க வச்சது தான் சட்டம்..அம்மா மாதிரி....
ஒரு சிலர் கம்பனில உயர்ந்த இடத்துக்கு வந்துட்டு அதை வேற யாருக்கும் விட்டு கொடுக்காம தன் வாரிசையே தனக்கு பிறகும் உயர்ந்த இடத்தில் வைக்க ....சரியான, திறமையான வாரிசை கண்டுபிடிக்க தெரியாம ஒவ்வொருத்தரையா பதவி கொடுத்து பக்குவ படுத்தி பாப்பாங்க ...கடைசில வாரிசு சண்டைல நொந்து நூடூல்ஸ் ஆவாங்க ..நம்ம கலைஞர் மாதிரி.....
ஆக மொத்ததுல பதவி சுகத்துக்காக ..சுத்தி உள்ளவங்களை நம்பாம ..தங்க சொந்த பந்தங்களையே ..நெருக்கத்துல வச்சி லாபம் ஒன்னையே குறிக்கோள்னு இருக்காங்க.....
கடைசிதொண்டனுக்கு வேணும்னா குடும்ப அரசியல் நச்டமாகலம் ..ஆனால் பெருந்தலைகளுக்கு எப்போதுமே வசதிதான்..னு விளக்கம் கொடுத்தேன் ..
என்ன அண்ணாச்சி சொல்றீங்க ...வைகோ லாம் அப்படி இல்லையே ....
ஆமாடா ...அதனால்தான் செஞ்சியும், எல்ஜியும் கழண்டு ஓடினாங்க ... அந்த இடத்துல அவர் மச்சானோ ..மவனோ இருந்தா இப்படி நடந்துருக்குமா.....அவரே இப்போ பீல் பண்ணிருப்பார்னேன் ..
அப்போ என்னதான் சொல்றீங்க ...தமிழ்நாட்டுல குடும்ப அரசியல் எப்போ தான் ஒழியும்...ஒழிந்சிட்டானு எப்படி தெரிஞ்சுக்கிறதுனு கேட்டான் ..
அப்படி கேளு .... என் காலத்துக்கப்புரம் ..நீ இப்படியே கேள்வி கேட்டுட்டு இருந்து ..எம் பொஞ்சதியோ / புள்ளையோ பதில் விளக்கம் சொன்னா ..குடும்ப அரசியல் தொடருது..
இல்ல நீ விளக்கம் சொல்ற இடத்துக்கு வந்துட்டா குடும்ப அரசியல் முடிஞ்சிதுன்னு தெரிஞ்சுக்கலாம் ....னு சொன்னா ...
உங்க குடும்ப அரசியலுக்கு தமிழ்நாட்டு அரசியலே மேல்னு நடக்க ஆரம்பித்தான் ......
Tuesday, September 16, 2008
ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சு வந்தாலும்...
நல்ல விசயந்தான் ..ஆனா வரவு எட்டன்னா செலவு பத்தன்னா மாதிரி இஷ்டத்துக்கு கஜாணாவ காலி பண்றார். கேக்கிறதுக்கு தான் ஒருத்தனுக்கும் தெம்பு இல்ல ணு சொன்னேன்..
அவன் என்ன அண்ணாச்சி எதிர் கட்சி மாதிரி எப்போவுமே குத்தம் சொல்றீங்க..ஒலகத்துல ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறது நம்ம ஊர்லதான் நீங்க என்னனானு இழுத்தான்..
டேயி நான் ஒன்னும் எதிரி கட்சி இல்ல... அரிசி ஒன்னும் தமிழ்நாட்டுல ஒரு ரூபாய்க்கு கிடைக்கல .... கொஞ்சம் பேருக்கு கொடுக்கிறாரு ...கிடைக்கிரதுக்கும் கொடுக்கிறதுக்கும் நெறைய வித்தியாசம் ...அதுக்கு பதிலா ஒருநாள் கூலில ஒரு ரூபா கூட்டினா நீ ரெண்டு ரூபா கொடுத்து வாங்கி பிரியாணி கூட செஞ்சி சாப்டலாம் .... நம்மால் பொருளாதரத்துல மேல கொண்டுபோக சொன்னா.. இலவசமா கொடுத்து கொடுத்தே குட்டிசுவரக்கி கற்காலத்துல போய் விடுவார் போல இந்த பொற்கால மன்னர் ...
அதுக்கு போங்கனாட்சி நீங்க கரெண்ட் கட் பண்ற காண்டுல பேசுறீங்க .. அம்மா ஆட்சிலேயுந்தன் கரெண்ட் கட் இருந்திச்சி ....இப்போ விலைவாசி எல்லாம் யேரிச்சி, தலைவர் என்ன பண்ணுவார் பாவம்ணு வருத்தப்படுறான் ....
எல்லாந்தான் அம்மா ஆட்சிலேயும் இருந்திச்சி... இருந்திச்சி ணு சொன்னா ..அப்போ நீங்க எதுக்கு ..அம்மாவே இருந்துருக்கலாம்ல.. வீனா எலேக்சன் எதுக்கு..?..
" எங்கள் ஓட்டுனர் திறமையனவர்னு " பஸ்ல எழுதிருக்கிற மாதிரிதானே ...ஐயா நல்லவரு வல்லவரு அனுபவமிக்கவரு ...குண்டும் குழியுமான ரோடுலேயும் ஆடாம அலுங்காம கொண்டுபோவார்னு தானே தமிழ்நாடுங்க்ற வண்டியகொடுத்தா ..அது சொத்தை இது சொள்ளைணு சொல்லிட்டு வண்டிய பள்ளத்துல விட்டா நாங்க பாத்துட்டு நிக்கனுமானு கேட்டேன்....
நீங்க எப்பவுமே இப்படித்தான் ..இலவசமா கொடுத்தாலே உங்களிக்கு பிடிக்காதே..உங்ககிட்ட பேசி வீணடிக்கிற நேரத்துல உருப்படியா இலவச தொலைக்காட்சில அடுத்து தலைவர் என்ன இலவசமா கொடுக்க போறார்னு பாக்கபோறேனு கிளம்பிட்டான்..
அடுத்த எலக்சன்ல தமிழ்நாட்டு மக்களை இலவசத்துல இருந்து ஆண்டவனே ஒரு கட்சி ஆரம்பிச்சுவந்தாலும் காப்பாத்த முடியாது போல....
Friday, August 29, 2008
குசேலன் ஒரு பார்வை
வந்தும் வராததுமாய் குசேலன் படம் ஓடலயாமே ரெம்ப நஸ்டமாச்சமே யாரெல்லாம் தெருவுக்கு வந்துடாங்கனு கேட்டான்....
டேய் படம் டைரக்ட் பண்ணின இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி சம்பளம் கிடைச்சிருக்கு அதனால அவருக்கு நஷ்டம் இல்ல. நடிச்ச ரஜினிக்கு 20 கோடி அதனால அவரும் நஷ்ட பட்டிருக்க மாட்டாரு.
அப்போ படம் எடுத்த பாலசந்தர் நஷ்டப்பட்டாரா? ணு கேட்டான்.. அவரு ஏன்டா கஷ்டப்படுரறு 61 கோடிக்கு பிரமீட் சாய்மீராக்கு வித்துட்டாரே..!!!..
சாய் மீராவும் 600 பிரிண்ட் போட்டு தியேட்டர் காரங்ககிட்ட வித்துட்டு..
அப்போ யாருக்குதான் நஷ்டம்? எல்லாம் நல்லாதானே நடந்திருக்கு..ணு கேட்டான்..
அப்படி கேளு ... இது நஷ்டக்கணக்கு இல்ல.. இப்போ நடக்கிறது லாபத்தை பங்கு பிரிக்கிற சண்டை கணக்கு....தியேட்டர்காரங்க ரஜினி படம்பிளாக்கில் 500,1000 ணு வித்தா கோடி கோடியாய் அள்ளலாம்நூ பேராசை பட்டு பிரமீட் சாய்மீரா சொன்ன விலைக்கு வாங்கி அநியாய விலைக்கு டிக்கெட் விற்க நினைச்சா. நம்ம பய ஒருத்தனும் வங்கி பாக்க மாட்டேனுட்டான். இப்போ ஒரிஜினல் திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் கூட வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால்.
இப்போ பட லாபத்தை பங்கு போட தியேட்டர் காரங்க கணக்கு கேக்குறாங்க....
கிடைச்ச லாபத்தை பங்கு போட ஒருதருன் தயாரா இல்ல .. அது தான் இந்த குடிமிபுடி சண்டை....
அப்போ இந்த லாப நஷ்ட கணக்கெல்லாம் யாரு பாக்கா ?
அடேய் யாரும் ஆடிட்டர் வச்சி அக்கௌன்ட்ஸ் காட்டலை ....இதெல்லாம் காத்து வாக்குல வர செய்தி ..உண்மை நிலவரம் உள்ளவங்களுக்கு தெரியும்.... நமெக்கெல்லாம் கருப்பு பண கணக்கு காட்டமாட்டாங்க.... நீயும் நானும் நம்ம ஊர் டூரிங்டாக்கீஸ்ல 5 ரூபாய்க்கு மேல 5 காசு கொடுத்து பாக்க மாட்டோம் இதெல்லாம் நமக்கு எதுக்கு?.. போய பொழப்பை பாரு..
கோடிகளுக்காக நடக்கும் கேடிச்சண்டைய நாமளும் தெருக்கோடியில நின்னு பாக்கலாம்.....ணு கோவாலு முனகிட்டே நடக்க ஆரம்பிச்சான் .
Friday, August 15, 2008
டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...
என்னடா என்ன விஷயமுன்னு கேட்டா , "கல்வி அறக்கட்டளை" னா என்னனு கேட்டான். நானும், பொதுமக்கள் நாலு பேர் நல்லவிதமா படிக்க காசு உதவி பண்றதுக்கும், இலவசமா / மானியமா கல்வி கற்று கொடுக்கவும், மற்றும் பல கல்வி பயன்பாட்டுக்கும் உதவுற வகையில தனியாரோ /அரசோ நிர்வகிக்கிற அமைப்புனு சொன்னேன். அதுக்கு வரி விலக்கெல்லாம் உண்டானு கேட்டான்? நானும் ஆமானு சொன்னேன்.
டி.எம். சவுந்திரராஜன் யாருன்னு தெரியுமான்னு கேட்டான். அவர் பழம்பெரும் பின்னணி பாடகர். நம்ம புரட்சி தலைவருக்கெல்லாம் நிறைய பாட்டு பாடிருக்கார்னு சொன்னேன். அவருக்கும் கல்விக்கும் என்னடா சம்பந்தம்... ஏன்டா மொட்டை தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சு போடுறேன்னு கேட்டா.... அதுக்கு அவன் கேக்கான் .....
நம்ம முதல்வரின் மூத்த மகன் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் டி.எம். சவுந்திரராஜனுக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்காங்களே.... டி . எம் . ஸ் ஏதாவது படிக்க போறாரா ?...
Monday, August 11, 2008
அன்புள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவருக்கு...
அப்போதான் இந்த மரமண்டை யோசிக்க ஆரம்பிச்சுது. ஒருவேளை நாடார் கட்சினா வேற சாதிசனம் ஓட்டு போடதுனு தலை நினைச்சுதானு.......
அப்போ கோவாலு திரும்பவும் உள்ள புகுந்து "ஏன்டா வேற சதிசனத்தை சொல்ற நம்ம நாடக்கமாரே ஒட்டு போட மாட்டாங்களே...ஏற்கனவே திருநெல்வேலில ஆப்பு வைச்சங்கள" அதுக்குள்ளே மறந்திட்டியானு கேட்டான் .
அதுக்கு நா தலைவரு எவ்வளவோ பண்ணிருக்கார் ... மெர்கண்டைல் பேங்க் பேரணி வந்தார்னு சொன்னேன். உடனே "நானும்தான் வந்தேன் அவர் அப்பரம் என்ன பண்ணினாரு "ணு குறுக்க அருவாளை போட்டான். அவன்சொல்றதும் நெசந்தானே....
நானும் விடாம சரி அதை விடு பெருந்தலைவருக்கு மணிமண்டபம் கட்டுராரேனு சொன்ன்னேன். அவன் அதுக்கு மண்டபம் அடிகல்லோட நிக்கி... காவேரி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வரும் மண்டபம் முடியாதுன்னு சொல்லறான். ஏன்னு கேட்டா முந்தி தலைவர்கிட்ட நாடார் முத்திரை இருந்தது , இப்போ தான் சமத்துவ தலைவராகிட்டாரே... பெருந்தலைவருக்கு கட்டினா வரிசையா அண்ணலுக்கும், பசும்பொன்னுக்கும் கட்டணுமே னு யோசிப்பாரேனு.... இப்போஎல்லாம் கோவாலும் புத்திசாலி ஆகிட்டான்.
என்னடா எது சொன்னாலும் விட மாட்டேன்குரானேனு நானும் யோசிச்சு " இது நாள் வரைக்கும் தலைவரு நாடார் சமுதாயத்துக்கு தானே மொங்கான் போட்டாரு .. நாட்டுல இன்னும் நெறைய சமுதாயம் இருக்குல அதையும் விடக்கொடதுனு நினைசிருப்பர்போலனு" சொல்லி திரும்பி பாத்தா ஆளையே காணோம் சிட்லு மாதிரி பரந்திட்டான்...
பனையேரியா கொக்கா..... என்ன தலைவரே நான் சொல்றது சரிதானே ?....